டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பு
சார்பில் மதுக்கடை விற்பனையாளர்கள்
டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில்
முற்றுகை போராட்டம் !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 5 -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விற்பனையாளர்கள் 120-க்கும் மேற்பட்டோர், ஒருங்கிணைந்த டாஸ்மாக் தொடர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை
மாவட்டம் முழுவதும் மொத்தமாக 76 மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் காலியான பின் மீண்டும் திரும்ப பெறப்படுகின்றன. இந்த நடைமுறையை கைவிட வேண்டும் எனக் கூறி டாஸ்மாக் ஊழியர்கள் ராணிப்பேட்டை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதே போல, காலி பாட்டிலை திரும்பபெற வேண்டும் பை பேக் முறையை திரும்ப பெறவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள 76 மதுகடைகளை மூடிதொடர் போராட்டம்
நடத்துவோம் என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் MRP எம். ஆர். பி விலையில் மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்றால், கூடுதல் செலவி னங்களை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடு த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக