தனியார் வீட்டுமனை விற்பனைக்கு செல்லும் பாதைக்கு ஊராட்சி பொது நிதியிலிருந்து நிதியில் கல்வெட்டு அமைத்ததாக குற்றச்சாட்டு !
குடியாத்தம். செப்டம்பர். 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டசமுத்திரம் ஊராட்சியில் பொன்னம்பட்டி பகுதியில் தனியார் வீட்டுமனை விற்பனை நடை பெறும் இடத்திற்கு செல்லும் பாதையில். ஊராட்சி பொது நிதியில் கல்வெட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.2026–2027-ம் ஆண்டுக்கான அரசு பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மதிப் பீட்டில் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டதா அல்லது தனியார் வீட்டுமனை பகுதிக்கு செல்லும் வகை யில் அமைக்கப்பட்டதா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்து ள்ளது.ஊராட்சி பொது நிதியில் பொது மக்களின் அடிப்படை வசதிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிலையில், தனியார் வீட்டுமனை விற்பனைக்கு பயன்படும் வகையில் பணிகள் மேற் கொள்ளப்பட்டிருந்தால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.மேலும், பணிக்கான மதிப்பீடு, நிதி ஒதுக்கீடு மற்றும் பணியின் பயன் பாடு குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடியாத்தம் நகராட்சி 36 வார்டுக்கு உட்பட்ட பகுதி எனஅப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பழைய கல் வெட்டு இருக்கும்போது கழிவுநீர் தங்கு தடையின்றி சென்றதாகவும் தற்போது கழிவுநீர் வெளியேறாமல் மழை பெய்யும் நேரத்தில் கழிவு நீர் வீட்டினுள் புகுந்து மிகுந்த சிரமப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.நீர்வளத் துறைக்கு சொந் தமான இடத்தில் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் கொண்ட சமுத்திரம் ஊராட்சி யின் பொது நிதியிலிருந்து கட்டப்பட்டு ள்ள கல்வெட்டால் அப்பகுதி மக்களிடை யே பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக