உலக அளவில் புகழ் பெற்ற ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை உறுப்பு தானத்தில் சிறப்பான பங்களிப்பு ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கு விருது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 செப்டம்பர், 2026

உலக அளவில் புகழ் பெற்ற ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை உறுப்பு தானத்தில் சிறப்பான பங்களிப்பு ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கு விருது!

உலக அளவில் புகழ் பெற்ற ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை உறுப்பு தானத்தில் சிறப்பான பங்களிப்பு ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கு விருது!
வேலூர் , செப்டம்பர் 24 -
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்ட மன்ற தொகுதி, திருமலைகோடி, உலக அளவில் புகழ்பெற்ற ஸ்ரீபுரம் ஸ்ரீ நாரா யணி பீடம்,  ஸ்ரீ சக்தி அம்மாவின் திரு வருளால், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை யில் சிறப்பான பங்களிப்புக்காக, “CMCHIS திட்டத்தின் கீழ் இறந்த நன் கொடையாள ரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தை சிறப்பாகப் பயன்படுத்தியதற்கான பாராட்டு விருது – 2-ம் பரிசு” பெற்றுள்ளது
சென்னையில் 23.09.2026 புதன்கிழமை அன்று நடைபெற்ற TRANSTAN Organ Donation Day நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர். டே ரேஸ் அகமது, இவ்விருதை வழங்கினார். ஸ்ரீ நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குநரும் அறங்காவலருமான பேராசி ரியர் டாக்டர் என். பாலாஜி மற்றும் சிறு நீரகவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் எழில்நிலவன் ஆகியோர் மருத்துவமனை சார்பில் விருதைப் பெற்றுக்கொண்டனர். இறந்த நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் உறுப்புகளை முறையாகப் பயன்படுத்தி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சேவையைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad