அணைக்கட்டு செதுவாலையில், அறுபது ஆண்டுகால ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 செப்டம்பர், 2026

அணைக்கட்டு செதுவாலையில், அறுபது ஆண்டுகால ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை !

அணைக்கட்டு செதுவாலையில், அறுபது ஆண்டுகால ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை !
குண்டும் குழியுமான சாலையில் தத்தளி க்கும் வாகன ஓட்டிகள் - நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரிப்பு !
 
அணைக்கட்டு , செப்டம்பர் 24 -
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா செதுவாலை பேருந்து நிலையம் அருகே, விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை பல ஆண்டு களாக முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாகவும், ஆழமான பள்ளங்களுடனும் காணப்படுகிறது.
 இதனால் இவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்ற னர். சாலையில் உள்ள பள்ளங்களில் வாகனங்கள் இறங்குவதால் டயர் பஞ்சர், சஸ்பென்ஷன் உள்ளிட்ட பழுதுகள் ஏற் படுவதுடன், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் நிலையும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஓவர் லோடு வாகனங் கள் இந்த குழிப்பள்ளத்தில் சக்கரம் இறங்கும் போது நிலை தடுமாறி கவுறும் விதத்தில் நிலை தடுமாறி வருகிறது. மேலும், பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளா கும் சம்பவங்களும் நடைபெற்று வருவ தாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சாலையை உடனடியாக தரமான முறையில் சீரமைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad