ராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனை யில் உலக இதயதின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 29 -
ராணிப்பேட்டை மாவட்டம் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (CMC) வளாகத்தில் உலக இதய தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ் ச்சிகள் நடைபெற்றன.இதயவியல் துறை, இருதய மற்றும் மார்பு அறுவை சிகிச் சைத் துறை மற்றும் செவிலியர் துறை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், இதய பாதுகாப்பு மற்றும் செயல்பாடு குறித்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து உரையாற்றினார். தொ டர்ந்து இதயம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் கள் இதயம் நமது வாழ்வின் அடிப்படை. ஆனால் இதய நோய் இருந்தும் அதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவ தில்லை. 50 வயது வரை எந்த அறிகுறி யும் இல்லாமல் இருந்து முதல் அறிகுறி யாகவே தீவிர மாரடைப்பு ஏற்படக்கூடும். எனவே இந்த ஆண்டின் கருப்பொருளான “ஒரு துடிப்பை கூட தவறவிடாதீர்கள்” என்பதற்கு ஏற்ப, நோய் வந்த பின் சிகிச் சை அளிப்பது மட்டுமல்லாமல், ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மற்றும் இருதய அவசரநிலை ஏற்படும் போது சரியாக செயல்பட தயாராக இருப்பது முக்கியம் என வலியுறுத்தினர். உலக இதய தினத் தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள்:
– 14 ஆகஸ்ட் 2026 – இரத்த தான முகாம்: 79 பேர் பரிசோதிக்கப்பட்டு 47 பேர் வெற் றிகரமாக இரத்த தானம் செய்தனர்.
10 செப்டம்பர் 2026 – ஜூம்பா உடற் பயிற்சி: பணியாளர்களுக்காக குழந்தை மருத்துவத் துறை தலைவர் மேரி அன் பரசி தலைமையில் ஜூம்பா பயிற்சி நடைபெற்றது. – 12 செப்டம்பர் 2026 – சுவரொட்டி போட்டி: “ஒரு துடிப்பை கூட தவறவிடாதீர்கள்” என்ற கருப்பொருளில் 34 பேர் பங்கேற்றனர். – 15 செப்டம்பர் – CPR போட்டி, வினாடி வினா, குறும்பட போட்டி மற்றும் எஸ்கேப் ரூம் போட்டி: 13 அணிகள் பங்கேற்று மருத்துவ சிந்தனை மற்றும்குழுப்பணியைவெளிப்படுத்தினர்
– 20 செப்டம்பர் – நடைபயணம்: 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் CMC மருத்துவ மனையில் இருந்து முத்துக்கடை வரை நடைபயணம் மேற்கொண்டு பொதுமக் களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
– 22 செப்டம்பர் – ஆரோக்கிய சமையல் போட்டி: “இதய ஆரோக்கியமான சிற்றுண் டிகள்” என்ற தலைப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் CMC வேலூர் – ராணிப்பேட்டை வளாக இயக்குனர், இருதயவியல் துறை தலைவர் விஜி சாமு வேல், அறுவை சிகிச்சை துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள், செவிலியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்ட னர் .
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக