பொது கழிப்பிடம் இடிப்பு,மிரட்டல் மற்றும் ஊராட்சி நிதி முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

பொது கழிப்பிடம் இடிப்பு,மிரட்டல் மற்றும் ஊராட்சி நிதி முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை !

பொது கழிப்பிடம் இடிப்பு,மிரட்டல் மற்றும் ஊராட்சி நிதி முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை !
அணைக்கட்டு , செப்டம்பர் 29 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தோளப்பள்ளி ஊராட்சியில் பரபரப்பு - பொதுக் கழிப்பிடத்தை இடித்ததாக புகார்: நடவடிக்கை கோரி எஸ்.சி., எஸ்.டி. மக்கள் வலியுறுத்தல் ஜாதி சான்றிதழ் தொடர் பான முறைகேடு,  பொது கழிப்பிடம் இடிப்பு  மிரட்டல் மற்றும் ஊராட்சி நிதி முறைகேடு புகார்கள் குறித்துவிசாரணை நடத்த தொடர்ச்சியாக கோரிக்கை.தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தமிழக டிஜிபி, சம்பந்தப்பட்ட துறை உரிய நடவ டிக்கை, உரிய நேரத்தில் எடுக்க எஸ்.சி. எஸ்.டி மக்கள் வேண்டுகோள் 44- அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, தோளப்பள்ளி ஊராட்சி, காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மனை வியின் பெயரில் முறைகேடாக ஜாதி சான்றிதழ் சமர்ப்பித்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாகவும், பின்னர் சட்டரீதியான நடவடிக் கையின் மூலம் அவர் வகித்த தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள்குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக சுரேஷ் மீது குற்ற எண் 321/2022-ல் வழக்குப் பதிவு செய்யப் பட்டு ள்ளதாகவும், அப்பகுதி மக்கள்தெரிவிக்கி ன்றனர். இந்நிலையில், காமராஜபுரத்தில் எஸ்.சி. சமூக மக்கள் பயன்படுத்தி வந்த பொது கழிப்பிடத்தை, உரிய அரசு அனு மதி அல்லது உத்தரவு பெறாமல் தன்னிச் சையாக இடித்ததாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர்களை மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. 
இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப் பட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற எண் 306/2023-ல் வழக்குப் பதிவு செய்ததாக தெரிவிக்கப் படுகிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட த்தில், எஸ்.சி., எஸ்.டி. மக்களின் நிலம், குடியிருப்பு, தண்ணீர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உரிமைகளில் சட்டவிரோத மாக தலையிடுதல் அல்லது அவற்றை சேதப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களு க்கு தொடர்புடைய குற்றப் பிரிவுகள் உள் ளன. தொடர்ச்சியான புகார்கள் குறித்தும் விசாரணை கோரிக்கை  மேலும், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றில் சில பொய்யானவை என அதி காரிகளின் விசாரணையில் தெரியவந் திருந்தால், சம்பந்தப்பட்ட புகார்களின் உண்மைத் தன்மை குறித்து தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.ஊராட்சியில் சிபாரிசு உள்ளிட்ட பணிகளுக்காக போலி பில்கள் தயாரிக் கப்பட்டதா, குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாமல் சுத்தம் செய்ததாகக் கணக் குக் காட்டி பணம் பெறப்பட்டதா என்பது குறித்தும், ஊராட்சி கணக்குகள், ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்தில் முறை கேடுகள் உள்ளதா எனவும், உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளின் பணி ஆவ ணங்கள், பில்கள், வவுச்சர்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதன் கணக் குகள் தொடர்பாக ஆய்வு மற்றும் கண் காணிப்புக்கான சட்ட நடைமுறைகளை விஜிலென்ஸ் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை தொடர்ச் சியாக கோரிக்கை வைத்து வருகின்ற னர்.எனவே, மேற்கண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அளவிலான அதிகாரிகள், மாவட்ட நிர் வாகம், ஊரக வளர்ச்சித் துறை, ஊராட் சித் துறை, காவல்துறை மற்றும்  லஞ்ச ஒழிப்பு/விஜிலென்ஸ் அதிகாரிகள் ஒருங் கிணைந்து ஆவணங்களை ஆய்வுசெய்து உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ள னர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad