தென்திருப்பேரை செப் 11 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் எட்டாவது கோவில் திருக்கோளூர் திவ்ய தேசம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் கொடி ஏறி 12 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
மதுரகவி ஆழ்வார் அவதார ஸ்தலம். 5 ம் திருவிழாவான நேற்று கருடசேவை நடந்தது. காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 7 மணிக்கு நித்தியல். 8 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மாடவீதி ரதவீதி எழுந்தருளினார்.
10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீதரன்.சடகோபன். சுந்தர்ராஜன். சேதுராமன் . ஆகிய அத்யாபகர்கள் சேவித்தனர்.
சாத்து முறை கோஷ்டி நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. உற்சவர் வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு வைத்தமாநிதி கருடவாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு 7.30 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
மாடவீதி ரதவீதி சுற்றி வந்தார். பின் நாட்களில் யானை. சந்திரப்பிரபை. குதிரை வாகனங்களிலும் வீதி உலா 15 ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் பாலாஜி. சீனிவாசன் விகனசன்.
ஸ்தலத்தார்கள் ஸ்ரீதரன் சுந்தரராசன். நிர்வாக அதிகாரி சதீஷ் ஆய்வாளர் நம்பி. அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் உறுப்பினர்கள் ராமலட்சுமி. காளிமுத்து. பொன்ராஜ். கன்னிராஜா. கள்ளப்பிரான் கோவிலில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி.
ஊர்த் தலைவர் கிருஷ்ணன் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் நாகமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக