சென்னையில் இருந்து மதுரை நோக்கி 36 பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து, உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அருகே சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட இளம்பெண்ணை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சுமார் 3 மணி நேரம் போராடி கிரேன் உதவியுடன் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசம்பந்த மூர்த்தியின் மகள் ஐஸ்வர்யா என்பவர் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் அடியில் சிக்கியிருந்த ஐஸ்வர்யாவை மீட்பதற்காக கிரேன் வரவழைக்கப்பட்டு, பேருந்தை கவனமாக உயர்த்தி சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவரை பத்திரமாக மீட்டனர்.
இதற்கிடையே, விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளை 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பேருந்தின் அடியில் சிக்கிய ஐஸ்வர்யாவும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
36 பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், இளம்பெண் ஒருவர் பேருந்தின் அடியில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாரின் துரித மீட்புப் பணியால் இளம்பெண் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக