குடியாத்தம் அருகே காவல் துறை ரோந்து பணியில் காரில் மணல் கடத்திய நபர் கைது !
குடியாத்தம், அக்டோபர் 04 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி மதனூர் சாலையில் காரில் மணல் கடத்திய செல்வகுமார்(வயது 42) கைது.
குடியாத்தம். தாலுகா உதவி ஆய்வாளர்
வெங்கடேசன் தலைமையில் போலீசார் உள்ளி மாதனூர் சாலையில் ரோந்து பணியில் நேற்று மாலைஈடுபட்டிருந்தனர் அப்போது ஆத்தோரம்பட்டி வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரின் உள் பகுதியில் மணல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் செல்வகுமார் (வயது 42) என்பதும் இவர் ஆத்தோரம் பட்டி பாலாற்றங்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளி காரில் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
20 மணல் மூட்டைகள் மற்றும் கார் ஆகிய வை பறிமுதல் செய்யப்படடு கிராமிய காவல் நிலையத்திற்க்கு கொண்டு வரப் பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக