அனுமதியின்றி டிராக்டர் மூலம் ஆற்றில் மணல் கடத்த முயன்ற இளைஞர் அதிரடி கைது ! போலீசார் விசாரணை !
குடியாத்தம் , அக்டோபர் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகன் சூர்யா (வயது 24). இவர் அக்டோபர் 4-ஆம் தேதி மாலை டிராக்டரில் ஆற்றில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு அனுமதியின்றி கடத் திச் செல்ல முயன்றதாக கூறப் படுகிறது.
அப்போது குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையி லான போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற் கிடமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோத னை செய்த போலீசார், அதில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டிருந்ததை கண்டறிந் தனர்.இதையடுத்து டிராக்டரை ஓட்டி வந்த சூர்யாவிடம் போலீசார் விசாரணை நடத் தினர். விசாரணையில், உரிய அனுமதியி ன்றி ஆற்றில் இருந்து மணலை எடுத்துச் செல்வது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்தனர். மணல் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட டிராக்ட ரும், அதிலிருந்த மணலும் பறிமுதல் செய்யப்பட்டு குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக