கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2026

கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !

 கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !
குடியாத்தம், அக்டோபர்  4 -
         வேலூர் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில் 79- ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல், விழிப்புணர்வு முகாம்   ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம், கல்லப்பாடி இணைந்து நடத் திய இந்த முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை குடியாத்தம் அரு கேயுள்ள அருணாச்சல யோகா தவமை யம், காளியம்மன்பட்டியில் நடைபெற்றது.
முகாமிற்கு வேலூர் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்ற அவைத்தலைவர் ப.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முனைவர் வே. வினாயக மூர்த்தி தொடக்க உரையாற்றி முகாமை தொடங்கி வைத்தார். பொருளா ளர் கோ.ஜெயவேலு வரவேற்புரை ஆற்றினார் தலைமை ஒருங்கிணைப் பாளர் கராத்தே பி.பொன்னரசு இணைப் புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர் களாக மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரஅன்பரசன் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பி.தனபால், குடியாத்தம் ரோட் டரி சங்க செயலாளர் ஜெ.தமிழ்ச் செல் வன் சமூக ஆர்வலர் வெ.ரா.நபீஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.மருத்துவர்கள் பங்கேற்பு   அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் Dr.R.சரவணன்  M.S. நட மாடும் மருத்துவக்குழு மருத்துவர் Dr.கீர்த்தனா M.B.B.S., அரசு சமுதாய சுகாதார நிலையம் கல்லப்பாடி Dr.பா. காவியா B.S.M.S., மற்றும் பல் மருத்துவர் Dr.T.தமிழ்மதி B.D.S. ஆகியோர் முகாமில் பங்கேற்று பொதுமக்களுக்கு பரிசோத னை செய்து சிகிச்சை அளித்தனர்.
முகாம் சிறப்புகள்: மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோ தனை, பொது மருத்துவம், பல் மருத்து வம், சித்த மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை கள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடு களை  மகளிர் அணி தலைவர் எம். அபி ராமி செயலாளர் பொ.விஜயா மாணவர் அணி இரா.பாஸ்கர், ஏ.கி.திகழரசு ஆகி யோர் செய்திருந்தனர்.முடிவில் மாவட்ட துணைத் தலைவர் மா.கோஞானசேகர் நன்றியுரை ஆற்றினார்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad