இந்திய கூட்டணி சார்பில் தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாரை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் குறித்து திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் இந்தியா கூட்டணி சார்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகின்ற ஆறாம் தேதி நாடாளுமன்ற வாயில் பகுதியில் மாபெரும் பேரணி நடத்தி இந்திய தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு செல்ல உள்ளோம் இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 13 மற்றும் 14 தேதிகளில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது
நெல்லை மாவட்டத்தை பொறுத்த அளவில் அனைத்து இந்திய கூட்டணி தலைவர்களும் இணைந்து 13-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தின் பேரணியும் நடத்த நடத்த உள்ளம் 14ஆம் தேதி தென்காசி மாவட்டத்தின் பேரணியை நடத்த உள்ளோம் 15 ஆம் தேதி சென்னையில் அனைத்து இந்திய கூட்டணி தலைவர்கள் தொண்டர்களும் பல லட்சக்கணக்கில் கலந்து கொள்ளும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்
அப்போது அவரிடம் இடைத்தேர்தல் முடிவு குறித்து கேட்டதற்கு தேர்தலில் சந்தேகம் உள்ளதா இரண்டிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் என தெரிவித்தார்
மேலும் குலவனிகபுரம் ஒய் வடிவ பாலம் குறித்த கேள்விக்கு விரைவில் வேலை நடைபெறும் தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மாநில நெடுஞ்சாலையாக மாற்றி உள்ளது 108 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது தற்போது அது இரு வழி பாதையாக உள்ளது அதனை நான்கு வழி பாதையாக மாற்றி அதனை தயார் செய்து வருவதாகவும் அதனால் சில வாரம் காலதாமதம் ஏற்படும் பாலம் பணி துவங்கும் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநகர மாவட்ட தலைவர் ராமேஸ்வரன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உடன் இருந்தனர்.
_செய்தி நெல்லை மாடசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக