ரூ.135 கோடி உயர்ரக போதை பொருள் பறிமுதல் நாகை தவெக நிர்வாகிக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு கைதான 4 பேரிடமும் 24 மணி நேரம் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2026

ரூ.135 கோடி உயர்ரக போதை பொருள் பறிமுதல் நாகை தவெக நிர்வாகிக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு கைதான 4 பேரிடமும் 24 மணி நேரம் விசாரணை !

ரூ.135 கோடி உயர்ரக போதை பொருள் பறிமுதல் நாகை தவெக நிர்வாகிக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு கைதான 4 பேரிடமும் 24 மணி நேரம் விசாரணை !
நாகப்பட்டினம் , அக்டோபர் 18 -
நாகப்பட்டினம் மாவட்டம் நாகை அருகே ரூ.135 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கை தான தவெக நிர்வாகிக்கு சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனடிப்படையில் தவெக நிர்வாகி உள்பட கைதான 4 பேரிடமும் 24 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்கு வார்கள் என்று கூறப்படுவதால் பரபரப்பு நிலவுகிறது. நாகையில் இருந்து இலங் கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தபெட்டமைன் கடத்துவதாக ராமநாத புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வு துறை திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு தக வல் வந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் (16ம் தேதி) காலை நாகைமாவட்டம் வேளாங்கண்ணி அருகேபிரதாபராமபுரம் நடுத்தெருவை சேர்ந்த பைனான்சியரான சுகன்(வயது 27) என்பவர் வீட்டிற்கு மத் திய வருவாய் புலனாய்வு இயக்குனரக இணை இயக்குனர் கனக சுப்பிரமணி யன் நாகை சுங்கத்துறை கண்காணிப் பாளர்கள் சசிசேகர், ஆனந்த், தீபக் ஆகி யோர் தலைமையிலான 20 பேர் கொண்ட அதிகாரிகள் 4 கார்களில் வந்தனர். சுகன் வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வருகிறார்.அதிகாரிகள் அதிரடி யாக சுகன் வீட்டுக்குள் நுழைந்து சோத னை மேற்கொண்டனர். இதில் சுகன் வீட்டில் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த தலா 5 கிலோ எடையுடன் 27 பாக்கெட்டுகளில் சர்வதேச சந்தை மதிப் பில் ரூ.135 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போ தைப்பொருளை கண்டு பிடித்தனர். காரை போதை பொருளுடன் பறிமுதல் செய்தனர்.இந்த கடத்தலுக்கு மூளையாக நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப் பினரும், வழக்கறிஞருமான வேளாங் கண்ணி அருகே உள்ள கீழப்பிடாகை சந்தாமணி மெயின் ரோட்டை சேர்ந்த பூபாலன்(வயது 42) செயல்பட்டுள்ளார். இவரும், சுகனும் நெருங்கிய நண்பர்கள். இதையடுத்து பிரதாமராமபுரத்தில் இருந்து 8 பேர் கொண்ட அதிகாரிகள் பூபாலன் வீட்டிற்கு சென்று பல மணி நேரம் சோதனை நடத்தினர். விசாரணை யில் பூபாலன் மனைவி இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.இதை பயன்படுத்தி சுகன் போன்றவர்கள் மூலம் நாகையில் இருந்து இலங்கைக்கு பல ஆண்டுகளாக போதைப்பொருட்களை அவர் கடத்துவது விசாரணையில் தெரி யவந்தது. 2 வீடுகளிலும் விசாரணை மாலை 5 மணி வரை நீடித்தது. பின்னர் பூபாலன், சுகன், வேளாங்கண்ணி காந்தி செட்டி தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 29), பிரதாபராமபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்த சுகனின் மற்றொரு நண்பர் சதீஷ்(வயது 30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் பூபாலன், சுகனிடம் இருந்து 2 ஆடம்பர காரும் பறி முதல் செய்யப்பட்டது.முதலில் மாலை 6.30 மணிக்கு பூபாலனிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் 8.30 மணிக்கு மற்ற 3 பேரையும் அழைத்து வந்தனர். அங்கு தொடர்ந்து தனித்தனியாக 4 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணை விடிய விடிய நடத்தப்பட்ட நிலையில் நேற்று இரவு 8.30 வரை நீடித்தது. பூபாலன் உள்பட 4 பேருக்கும் சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம். இலங்கையில் யாருக்கு போதை பொருள் அனுப்ப பதுக்கி வைத்தனர், இதுபோல் வேறு எங்கெல்லாம் போதை பொருளை அனுப்பி உள்ளனர், எத்தனை ஆண்டு களாக இதில் ஈடுபட்டு வருகின்றனர் என்று விசாரணை நடந்து வருகிறது.
 அமலாக்கத்துறை விசாரிக்க திட்டம்
நாகையில் ரூ.135 கோடி உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோதமாக பல கோடி பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமலாக்கத்துறையும் களத்தில் குதித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது. இந்த கும்பலுக்கு வெளி நாட்டி லிருந்து எவ்வளவு பணப் பரிமாற்றம் நடந்தது என தீவிர விசாரணை நடத்த உள்ளனர். 3 காவலர்களுக்கு தொடர்பா?
தவெக நிர்வாகி பூபாலனின் செல் போ னை ஆய்வு செய்ததில் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் உள்ள 3 போலீசா ரின் செல்போன் எண்களில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்தது கண்டு பிடிக் கப்பட்டுள்ளது. இதனால் போதை பொ ருள் கடத்தலில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என சுங்கத்துறை அலுவலகத் துக்கு நேற்று காலை வரவழைத்து 3 போலீசாரிடமும் அதிகாரிகள் தீவிர விசா ரணை நடத்தினர்.சிறையில் அடைப்பு 
தவெக நிர்வாகி பூபாலன் உள் பட 4 பேரை மருத்துவ பரிசோதனைக்காக நாகப்பட்டினம் சுங்கத்துறை அலுவலகத் தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு டன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இரவில் வேதாரண்யம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பூபாலன் சிக்கிய பின்னணி
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் மெத்தபெட்டமைன் போதை பொருள் இருந்ததை அண்மையில் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருடன் பூபாலன், சுகனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கண்காணிப்பு வளையத்துக் குள் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர் போதை பொருள் கடத்தலுக்காக கடந்த வாரம் வேதாரண்யம் விடுதியில் தங்கி இருந்தார் என்றும், அவர் கோடி யக்கரையில் ஒரு மீனவரிடம் ரூ.50,000 கொடுத்து படகையும், காரைக்காலில் இருந்து ரூ.1லட்சம் மதிப்பிலான அதி வேக இன்ஜினையும் வாங்கிச் சென்ற தாக ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தெரி வித்துள்ளார். இந்த தகவல்களின் அடிப் படையில் அதிரடி நடவடிக்கை எடுத்து பூபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய் யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கனடாவை சேர்ந்த இலங்கைக தமிழர் யார் என்றும் விசாரணை நடந்து வருகி றது. நடிகர், நடிகைகளுக்கு சப்ளை?
நாகையில் கைதான போதை பொருள் கும்பலுக்கு திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளுடன் தொடர்பு உள்ளதா? அவர் களுக்கு உயர் ரக போதை பொருளை இந்த கும்பல் சப்ளை செய்ததா என்றும் வருவாய் குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad