பரங்கிப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு விழா 150 கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சீர்வரிசை வழங்கி சிறப்பிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2026

பரங்கிப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு விழா 150 கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சீர்வரிசை வழங்கி சிறப்பிப்பு.


கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 150 கர்ப்பிணித் தாய்மார்கள் பங்கேற்ற 'சமுதாய வளைகாப்பு விழா' மிகச் சிறப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் அரசு அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ். சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தாய்மார்களுக்குச் சீர்வரிசைகளையும் வாழ்த்துகளையும் வழங்கினார்

இந்நிகழ்ச்சியைப் பரங்கிப்பேட்டை ஒருங்கிணைந்த ஒன்றியம், ஒருங்கிணைந்த பேரூர், கிளை பேரூர் மற்றும் கடலூர் தெற்கு மாவட்டத் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக
 கொள்கைப் பரப்பு அணி
 இளம்பெண்கள் பாசறை
மீனவர் அணி
சுற்றுச்சூழல் அணி
உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்கள்
விழாவில் கலந்துகொண்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாரம்பரிய முறைப்படி வளையல்கள் அணிவிக்கப்பட்டு, பலவகைச் சாதங்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

செய்திகளுக்காக
P. ஜெகதீசன்
கடலூர் மாவட்ட ஒளிப்பதிவாளர்,
தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு, கடலூர் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad