குடியாத்தம் வசந்த நகரில் 50 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வசந்தம் நகரில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட 50 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா பறிமுதல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நடத்தி வந்த பெட்டிக்கடையில் போலீசார் அதிரடி சோதனை – தீவிர விசாரணை வேலூர் மாவட்டம்குடியாத்தம் அடுத்த சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட வசந்த நகர் பகுதியில் அரசால் தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நகர காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வசந்த நகர் பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும், வடிவேலு என்பவரின் மகனும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான வெங்கடேசன் என்பவரது கடையில் போலீசார் சோதனை மேற் கொண்டனர்.இந்தச் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட் கள் 11. மூட்டைகளில் சுமார் 50 கிலோ எடையில் இருப்பது கண்டறியப்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றைப் போலீசார் பறிமுதல் செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்கள் எங்கிரு ந்து கொண்டுவரப்பட்டன, அவை விற்ப னைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந் தனவா, இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். குடியாத்தம் பகுதியில் தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்களின் விற்ப னையைத் தடுக்க போலீசார் மேற் கொண்ட இந்தச் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக