டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, செய்யாறு நகர லயன்ஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட உள்ள 2026-ம் ஆண்டுக்கான சேவை விருதுகளுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்யாறு நகர லயன்ஸ் சங்க மாவட்ட சேவைத் தலைவர் தி. வடிவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் மா. சுந்தரமூர்த்தி, நல்லாசிரியர் அ. முபாரக், பட்டதாரி ஆசிரியர் முனைவர் இ. கமலக்கண்ணன், நல்நூலகர் ஜா. தமீம், பட்டதாரி ஆசிரியர் கா. ரகுபதி, உடற்கல்வி ஆசிரியை கோ. ரேவதி, சூப்பர் பிரைன் யோகா பயிற்சியாளர் எஸ். சிங்காரவடிவேல், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஏ. மரிய சாந்தி, தற்காலிக ஆசிரியை டி. பொன்னி, உதவி ஆசிரியை எம். விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியை எஸ். காஞ்சனா, உதவி ஆசிரியை எஸ். லதா, சத்துணவு அமைப்பாளர் எம். லதா, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை டி. செல்வராணி, பட்டதாரி ஆசிரியர் டி. சங்கர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை என். இராணி ஆகிய 16 பேர் சேவை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சமூக சேவை, கல்வி, ஆசிரியர் பணி, நூலகப் பணி, யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் இவர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளதாக லயன்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
சேவை விருதுக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக