ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர், பாதாள சாக்கடை, எலக்ட்ரீஷியன், பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசாணை 10,239,152-ஐ திரும்பப் பெற வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 5 முதல் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தத்தை சி.ஐ.டி.யு உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் துவக்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆர்.முருகன் தலைமை தாங்கினார்.
இதில் நிர்வாகிகள் எம்.தமிழ்ச்செல்வன், எஸ்.ஜானகிராமன், எம்.சுரேஷ், ஆர்.விஜய், என்.பழனியம்மாள், ஆர்.முத்துராசன், ஜி.சமையாள், ஆர்.சரளா, ஆர்.நித்யா, ஏ.உமாவதி, ஆர்.ஜோதி, பி.கலைச்செல்வி, தர்மதுரை, எஸ்.முத்துபாண்டியன், எஸ்.ராமர், ஜெ.சத்தியசீலன், மகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கௌரவ தலைவர்கே.தங்கராஜ், மாநில அமைப்பு செயலாளர் ஓய்வு பெற்ற நல அமைப்பு எம்.ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.தலைவர் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் வி. சாமிநாதன்,மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் எம்.ஆறுமுகம்,துணைத் தலைவர் டி.தமிழ்மணி, சி டி யு மாவட்ட மு.பொருளாளர்.ஷேக் சலாவுதீன்,மாவட்டத் தலைவர் டி. ஜெயராமன்,சி.பி.எம் நகர செயலாளர் பி.ஸ்டாலின்,மாவட்ட துணை செயலாளர் டி. மகேஸ்ராஜா,சுமை பணி சங்கம் பி.சேகர், வி.தெ.ச. தலைவர் ஏ.கே.முருகன்,மாதர் சங்க நகர தலைவர் எஸ்.பேபி லட்சுமி ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர்.
தனியார்மய அரசாணைகள் 10,139, 152-ஐ திரும்பப் பெற வேண்டும்.
குறைந்தபட்ச ஊதிய அரசாணை 2(டி) 62 நாள் 11-10-2017 மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நகராட்சி, பேரூராட்சி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.
பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
கொரோனா கால ஊக்கத்தொகை ரூ.15,000 அனைத்து ஊராட்சி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுப்பு, அடையாள அட்டை வழங்க வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்பு பெற்ற மற்றும் வழக்கு நிலுவையில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி நாள் ஒன்றுக்கு ரூ.954 வீதம் 2026-க்கான நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
2026, 2027-க் கான தீபாவளி போனஸ் 8.33% வழங்க வேண்டும்.
PF பிடித்தத்தில் முறைகேடுகளை தவிர்த்து வருங்கால வைப்பு நிதியை முறையாக வழங்க வேண்டும்.
சுகாதார பணியாளர்களின் குடியிருப்புகளை பழுது நீக்கி புதிய குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக