மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க. சிந்து பிரச்சாரத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார்.
பிரச்சாரத்தின் போது மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து தேர்தல் தொடர்பான பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டார்.
மேலும், பொதுமக்களிடம் தேர்தல் தொடர்பான கருத்துகளை கேட்டறிந்ததுடன், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த பிரச்சார நிகழ்வில் உள்ளூர் நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தங்களது பிரச்சாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க. சிந்துவின் பிரச்சார பங்கேற்பு கட்சியினரிடையே கவனம் பெற்றது.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக