50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சியான சந்திப்பு – ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 அக்டோபர், 2026

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சியான சந்திப்பு – ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு !

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சியான சந்திப்பு – ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு !
குடியாத்தம், அக்டோபர் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள ஜோதி மேல் நிலைப் பள்ளியில், 1976 முதல் 1986-ம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு விழா 50 ஆண்டுகளுக்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.நெல்லூர் பேட்டை பகுதி யில் முதலில் ஜோதி தொடக்கப் பள்ளி யாக தொடங்கப்பட்டு, பின்னர் ஜோதி உயர்நிலைப் பள்ளியாகவும், தொடர்ந்து மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த் தப்பட்டது. இப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்க ளது பள்ளியில் ஒன்று கூடி, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கடந்த 4-ந் தேதி காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் தரணி, ராமு, பார்த்திபன், வரதராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து, முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை வரவேற்றனர். தொடர்ந்து தங்களுக்கு கல்வி கற்பித்த முன்னாள்ஆசிரியர்களை மாணவர்கள் மலர் தூவி வரவேற்று, அவர்களின் கல்விச் சேவையை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டினர். மேலும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். நீண்ட ஆண்டு களுக்குப் பிறகு தங்களிடம் கல்வி பயின்ற மாணவர்களை ஒரே இடத்தில் சந்தித்த ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னாள் மாணவர்கள் அனைவரும் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ந்து, நல்ல நிலையில் சிறப் புடன் வாழ வேண்டும் என ஆசிரியர்கள் மனமார வாழ்த்தினர்.இதையடுத்து முன்னாள் மாணவ, மாணவிகள் தங்க ளது பள்ளிப் பருவ நண்பர்களை சந்தித்து, சிறுவயதில் பள்ளியில் ஒன்றாக படித்தது, விளையாடியதுமற்றும் பல்வேறு இனிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர். 50 ஆண்டு களுக்குப் பிறகு நண்பர்களை நேரில் சந்தித்ததால் பலரும் மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் காணப்பட்டனர்.
விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர் களுக்கு உணவு, இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நீண்ட காலத்துக்குப் பிறகு நடைபெற்ற இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா, பள்ளிப் பருவ நட்பையும் பசுமையான நினைவு களையும் மீண்டும் உயிர்ப்பிக்கும் வகை யில் அமைந்தது. ஐம்பது ஆண்டுகள் கடந் தாலும் பள்ளிப் பருவ நட்பும் நினைவு களும் என்றும் மறையாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற இச்சந்திப்பு, பங்கேற்ற அனைவருக்கும் மறக்க முடியாத இனிய நிகழ்வாக அமைந்தது என முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்


 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad