வள்ளலார் பிறந்த நாள் விழா ஏழை களுக்கு அன்னதானம் வழங்ககும் நிகழ்ச்சி !
குடியாத்தம், அக்டோபர். 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளலார் அன்னமுது குடியில் சார்பில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வள்ளலார் அன்னமுது குடியில் நிர்வாகி கோமதி பூபாலன் தலைமை வகித்து, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் குமார், பெங்களூரு ராஜ்குமார், வேலங்காடு தர்மசாலை நிர்வாகி ஜெய பிரகாஷ், மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக