கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் தேங்கி நின்ற மழைநீரால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி எதிர் திசை சாலைக்குச் சென்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாழப்பாடியில் உள்ள டிராக்டர் கம்பெனி அலுவலக மீட்டிங் முடித்துவிட்டு, புதுச்சேரியைச் சேர்ந்த ராஜசெல்வம் என்பவர் காரை ஓட்டி வந்த நிலையில், 2 பேர் புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த கார் எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் பெய்த பலத்த மழையால் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் சிக்கி நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்துக்குள்ளான கார் சாலையின் நடுவே தல குப்புற கவிழ்ந்து கிடந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த எலவனாசூர்கோட்டை போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக