கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் திருமால்வளவன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கட்சியின் கொள்கைத் தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளையூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்திற்குச் சென்ற திருமால்வளவன், அங்கு தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் புத்தாடைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்புத் துணைச் செயலாளர் ராஜேஷ், மாவட்டச் செயலாளர் ஜே.பி. பிரபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக