செய்யாறு புத்தகத் திருவிழாவில் 2 -ஆம் நாள் மாலை நேர உரையரங்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 அக்டோபர், 2026

செய்யாறு புத்தகத் திருவிழாவில் 2 -ஆம் நாள் மாலை நேர உரையரங்கம்.

 
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு புத்தகத் திருவிழாவில் இரண்டாம் நாள் உரையரங்கம் நடைபெற்றது. செய்யாறு ஆர்சிஎம் பள்ளி வளாகத்தில் புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. 1-10-2026 அன்று நடைபெற்ற உரையரங்க நிகழ்ச்சிக்கு செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கத் தலைவர் எறும்பூர் கை. செல்வகுமார் தலைமை தாங்கி நிகழ்வை தொகுத்து வழங்கினார். நூல்களின் நன்மைகள் என்ற தலைப்பில் சங்கத் துணைத் தலைவர் எம். சுந்தரமூர்த்தி பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து தமிழ் வாசிப்பு வரலாற்று ரீதியாக பேசினார். வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் சங்க செயற்குழு உறுப்பினர் வா. இளவரசி இலக்கியங்கள், ஆன்மீகம் ஆகியவற்றை தொடர்பு படுத்தி வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து வந்தை ஜா. தமீம் நூல்கள் வாசிப்பது குறித்து கவிதை வாசித்து உரையாற்றினார். உரையரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியவர்களுக்கு தமிழ் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தினர். பதிப்பக உரிமையாளர் மா. அமரேசன், வருவாய் ஆய்வாளர் திருமால் மருகன், செய்யாறு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் எம். மணி, மாவட்ட துணைத் தலைவர் ஆர். பலராமன், செய்யாறு வட்ட தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த எச்.சுதாகர், அ. முபாரக், அறிவொளி க. வெங்கடேசன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad