தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் . சத்யபாமா ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்.
தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களிடம் நேரடியாக எடுத்துச் சொல்லும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் ஜனநாயக முறையில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மக்களின் தீர்ப்பை நாடி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அரசியல்வாதி என்பதற்காக அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல. அரசியல் கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம், ஆனால் ஒரு பெண்ணின் சமூகப் பின்னணியையும், உருவ கேலியும், பெண்ணினத்தையும் அவரது அரசியல் முடிவையும் இழிவுபடுத்தும் வகையிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிலும் முன்னாள் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்.
சத்யபாமா தொடர்பாக தெரிவித்த அருவருக்கத்தக்க கருத்துகளுக்கு விளக்கம் அளித்து தமிழக மக்களிடமும் தாராபுரம் வெற்றி வேட்பாளர்.
சத்யபாமாவிடம் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும் நடைபெற இருக்கின்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோல்வி பயத்தில் இருப்பதால் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீணாக அவதூறாக பேசி வருகிறார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் இரண்டு பேரும் அமோக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. எனவே தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உச்சகட்ட பதட்டத்தில் உள்ளார் என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது. ஜனநாயகத்தில் இறுதி தீர்ப்பு மக்களுடையது.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக