மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆணையாளர் ஆய்வு !
வேலூர் , அக்டோபர் 3 -
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி க்குட்பட்ட சஞ்சீவிபுரத்தில் இன்று (03.10.2026) முதன்மைச் செயலாளர்/உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆணையாளர் ஆர்.லால்வேணா, இ.ஆ.ப., அவர்கள் டெங்கு கொசு ஒழிப்பு மட்டும் டெங்கு உட்பட காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக் கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப் பணியாளர் களிடம் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக மேற்கொள்ளும் பணி கள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ்., இ.ஆ.ப., வேலூர் மாநகராட்சி ஆணையர் அ.கேத்ரின் சரண்யா இ.ஆ.ப., மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் விஜய் சந்திரன், நகர சுகாதார அலுவலர் பிரதாப் குமார் உடனிருந்தனர்.வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக