அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் களை நியமிக்கக் கோரிக்கைமுதல்வரின் தனிப்பிரிவுக்கு புதிய நீதிக் கட்சி சார்பில் மனு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் போதிய எண்ணிக் கையில் மருந்தாளுநர்களை நியமித்து, நோயாளிகளுக்கு தாமதமின்றி மருந்து கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, புதிய நீதிக் கட்சி யின் குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ். ரமேஷ், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக் காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் தேவையான எண்ணிக்கையில் மருந்தாளுநர்கள் இல்லாததால், மருந்து வழங்கும் பணி யில் கடுமையான பணிச்சுமை ஏற்பட்டு, நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மருத்துவ மனையில் 9 மருந்தாளுநர்கள் பணி யாற்ற வேண்டிய நிலையில், தற்போது 3 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், அவர்களில் ஒருவருக்கு மருந்துக் கிடங்கு பணியையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், மருந்து வழங்கும் பணியில் குறைந்த எண்ணிக் கையிலான பணியாளர்களே ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் மருந்தாளுநர் பற்றாக்குறையை உடனடி யாக சரிசெய்வது அவசியமாகும்எனவே குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருந்தாளுநர் பணி யிடங்கள், காலிப்பணியிடங்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையைஆய்வு செய்து, தேவையான எண்ணிக்கையில் மருந்தாளுநர்களை உடனடியாக நிய மிக்க வேண்டும். மேலும், அனைத்து மருந்து வழங்கும் கவுன்ட்டர்களும் முறை யாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய நீதி கட்சி நகர செயலாளர் என எஸ். ரமேஷ் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக