இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது!
குடியாத்தம் , அக்டோபர் 21 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்,, இடதுசாரி விவசாயி சங்கங்களின் சார்பில் இன்று தமிழகம் தழுவிய சாலை மறியல் போ ராட்டம் நடைபெற்றது விவசாயிகளுக்கு கட்டுபடியான விலையை அமல்படுத்த வேண்டும் இலவசமின்சாரத்தை பறிக் கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக வந்த விவசாய சங்கத்தினர் கே சாமி நாதன் துரை செல்வம் சிலம்பரசன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் குடியாத் தம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட னர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கத் தினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர் விவசாய சங்கத்தினரின் சாலை மறியல் போராட்டத்தால் குடியாத்தம் புதிய பேரு ந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீ சார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக