காட்பாடியில் வீணாகும் மக்கள் வரிப் பணம்! ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணி கள் நிழற் கூடம் பராமரிப்பின்றி பாழ டைந்த அவலம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 அக்டோபர், 2026

காட்பாடியில் வீணாகும் மக்கள் வரிப் பணம்! ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணி கள் நிழற் கூடம் பராமரிப்பின்றி பாழ டைந்த அவலம் !

காட்பாடியில் வீணாகும் மக்கள் வரிப் பணம்! ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணி கள் நிழற் கூடம் பராமரிப்பின்றி பாழ டைந்த அவலம் !
காட்பாடி , அக்டோபர் 21 -
        வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வன்றனந்தாங்கல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம், சுமார் 2014–2015-ஆம் நிதியாண்டில் ரூ.6 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம், உரிய பராமரிப்பின்றி பயன்பாட்டுக்குத் தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.
பயணிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மழை, வெயில் நேரங்களில் பாதுகாப்பாகஒதுங் குவதற்காகக் கட்டப்பட்ட இந்த நிழற்கூடம் தற்போது பராமரிப்பின்றிப் பாழடைந்து வருவதுபொதுமக்களிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட பொதுச் சொத்து முறையாகப் பராமரிக்கப்படாததால், அரசின் நிதி வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு உயர் பதிவி ஊழியர்கள் அலட்சியத் திற்கு யார் பொறுப்பு ரூ.6 லட்சம் செல வில் கட்டப்பட்ட பொதுமக்களுக்கான நிழற்கூடத்தைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய அதிகாரிகள் உரிய நடவடிக் கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசுப் பணத்தில் கட்டப் பட்ட கட்டிடம் பயன்பாடின்றிப் பாழடைந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அரசு உயர் பதவி ஊழியர்கள் இதுவரை நடவ டிக்கை எடுக்காதது நிர்வாக அலட்சியத் தையே வெளிப்படுத்துவதாகப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வேலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, நிழற்கூடத்தைச் சீரமைத்து, பராமரிக்க தவறிய சம்பந்தப் பட்ட துறை ஊழியர்கள் சொந்த பணத் தில் சுண்ணாம்பு அடித்து, மக்கள் பயன் பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கட்டிடம் பராமரிப்பின்றிப் பாழடைந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, கடமையைச் செய்யத் தவறிய பொறுப்பு டைய உயர் பதவி ஊழியர்கள் மற்றும் அலு வலர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றும், அரசுப் பணம் வீணடிக்கப்பட்டது உறுதியானால் விதி முறைகளின் படி இழப்பீட்டை வசூ லிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர் வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள் ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad