கண்ணமங்கலம் அருகே காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக ராணுவ வீரர் மீது புகார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 அக்டோபர், 2026

கண்ணமங்கலம் அருகே காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக ராணுவ வீரர் மீது புகார்.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக ராணுவ வீரர் மீது புகார் எழுந்துள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருவர் மது போதையில் காரில் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களைப் பிடித்த போலீசார் கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கவிதாவுக்கும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவரான ராணுவ வீரர் வாசுவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் கவிதாவை ராணுவ வீரர் வாசு தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

காவல் நிலையத்திலேயே காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad