அணைக்கட்டு அருகே பட்டாசு தொழிற் சாலையில் தீ விபத்து 2 பலி மேலும் ஒருவர் தீவிர மருத்துவ சிகிச்சை !
அதிமுக அணைக்கட்டு எம்.எல்.ஏ. வேலழ கன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. நேரில் தீ விபத்து குறித்து ஆய்வு !
அணைக்கட்டு , அக்டோபர் 21 -
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அலுவலகம் அடுத்த அப்புக்கள் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. எதிர்பாராத விதமா கத் திடீரென பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள் ளனர். சம்பவ இடத்திலேயே பெண் ஒரு வர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந் தார். மற்ற பட்டாசு தொழிற்சாலைப் பணியாளர்களைத் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தி ருந்த நிலையில், இன்னொரு பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அரசு ஊழியர்கள் மற்றும் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேலழகன் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை யைப் பார்வையிட்டு விபத்தில் சிக்கிய வர்களுக்கு முதலுதவிகள் ஈடுபட்டனர். அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் வேலழகன், உயிரிழந்தவரின் குடும்பத்தி னருக்கு ஆறுதல் தெரிவித்து, தீ விபத் தில் சிக்கிய பணியாளர்களை மருத்துவ மனையில் பார்வையிட்டு ஆறுதல் தெரி வித்துள்ளனர்.அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 32) என்பவர் அதே பகுதியில் சொந்தமாகப் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். மேலும், சின்ன அணைக்கட்டு பகுதியில் பட்டாசு தயாரி க்கும் தொழிற்சாலையையும் நடத்தி வருகிறார். இந்தத் தொழிற்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கப் படுகிறது.இந்த நிலையில், 21.10.2026 புதன்கிழமை காலை சுமார் 10 மணியள வில் தொழிற்சாலையின் தொழிலாளர் கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவெனப் பரவி யது. இதனால் தொழிற்சாலையில் பணி யில் இருந்த ஆறு பேர் அங்கிருந்து தப்பி வெளியேறியுள்ளனர். ஆனால், கொட்டா வூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் தொழிலாளி கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டதால், அவரால் வெளியே வர முடியவில்லை. இதனால் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா (வயது 36) என்ற பெண்ணும் தீயில் சிக்கிக் கொண் டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் பள்ளிகொண்டா தீயணைப்புத் துறையினர், தீயில் சிக்கிய சங்கீதாவை மீட்டு, உடனடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதாவும் உயிரிழந்ததாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் சிவராமன், டிஎஸ்பி நந்தகுமார், அணைக்கட்டு வட்டாட்சியர் மகேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று, தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையை நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தனர். உயிரிழந்த காயத்ரியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பட்டாசு தயாரிக் கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. பட்டாசு தயாரிக்கும் பணியின்போது ஏற்பட்ட தீப்பொறி காரணமாக விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய் யப்பட்டிருந்தனவா, தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங் களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக