குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகளுக்கு 99 வது மாதமாக அரிசி பருப்பு போன்ற நிவாரண பொருட்கள் வழங்கல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2026

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகளுக்கு 99 வது மாதமாக அரிசி பருப்பு போன்ற நிவாரண பொருட்கள் வழங்கல் !

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகளுக்கு 99 வது மாதமாக அரிசி பருப்பு போன்ற நிவாரண பொருட்கள் வழங்கல் !
குடியாத்தம் , அக்டோபர் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் லயன்ஸ் கிளப் வளாகத்தில்.மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகளுக்கு அரிசி பருப்பு போன்ற நிவாரண பொருட்கள் 99 வது மாதமாக இன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கேவி ராஜேந்திரன் தலை மை தாங்கினார் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா முன்னில வகித்தார் ஜ ஜே. கே. மாவட்ட தலைவர் 
 பாபாஜி வரவேற்புரை ஆற்றினார்
இதில் சிறப்பு அழைப்பாளராக லயன்ஸ் கிளப் தலைவரும் பிரம்மாஸ் பள்ளி நிறுவனமான. ஆர் பி செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சுமார் 100 நபர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.மற்றும் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் இன்னர் வீல் முன்னாள் தலைவி கீதாலட்சுமி. வள்ளலார் குடில் கோமதி பாபு சமூக சேவகி  செம்மலர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி னார்கள் மாற்றுத்திறனாளிகள் திருநங் கைகள் விதவிகள்  செய்தியாளர்கள் யுவராஜ் வெங்கடேசன் ஞானம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் இறுதியில் கவிதா நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad