புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவல்துறையினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்ற இப்பேரணியில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், மாணவர்களின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது.
புதுச்சேரியில் தொடங்கிய 5 காவலர்களை கொண்ட குழு, 6 மாநிலங்கள் வழியாகப் பயணித்து அக்டோபர் 28-ம் தேதி குஜராத் ஏக்தா நகரைச் சென்றடைகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக