திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திருநங்கைகள், தங்களுக்குச் சொந்தமாக வீடு இல்லாத நிலையில், அரசு சார்பில் இலவச வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆரணி சட்டமன்ற உறுப்பினரும், திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழகச் செயலாளருமான L. ஜெயசுதா லட்சுமிகாந்தன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்த திருநங்கைகள், தங்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் இலவச வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, திருநங்கைகளின் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைத்து, அவர்கள் பாதுகாப்பான வீடுகளில் வசிக்கும் சூழல் உருவாக வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக