வடலூரில் பூட்டிய வீட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 அக்டோபர், 2026

வடலூரில் பூட்டிய வீட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை...

 


கடலூர் மாவட்டம், வடலூர் ஓம் சக்தி நகர் பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஓம் சக்தி நகரைச் சேர்ந்த இசைவேந்தன் (37), துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினோதினி (37), மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார்.


நேற்று காலை குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.நேற்று இரவு வீடு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.


உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.


இதுகுறித்து வினோதினி அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.


மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad