காந்தி ஜெயந்தி முன்னிட்டு காந்தி வேடமணிந்து புத்தகங்கள் வாசித்த இளம் வாசகர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 அக்டோபர், 2026

காந்தி ஜெயந்தி முன்னிட்டு காந்தி வேடமணிந்து புத்தகங்கள் வாசித்த இளம் வாசகர்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் கிளை நூலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நூலகத்தின் இளம் வாசகரான ம. நவீன் சாய், மகாத்மா காந்தி வேடமணிந்து, காந்திய சிந்தனைகள் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகங்களை வாசித்தார்.
மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் இந்த நிகழ்வு அமைந்தது.
காந்தி வேடமணிந்து புத்தகங்களை வாசித்த இளம் வாசகர் ம. நவீன் சாயை, நல்நூலகர் ஜா. தமீம் பாராட்டி, பரிசு வழங்கி சிறப்பித்தார்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad