கலவையில் விசிக நிர்வாகி சிவகுமார் வெட்டிக்கொலை! கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2026

கலவையில் விசிக நிர்வாகி சிவகுமார் வெட்டிக்கொலை! கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை.


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், கலவை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிவகுமார் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை

நாகல் ஏரி பகுதியைச் சேர்ந்த சிவகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அவர் கலவை பகுதியில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலவை காவல் நிலைய போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள், உயிரிழந்த சிவகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை அரசியல் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது தனிப்பட்ட பகை காரணமாக நடந்ததா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைப்பு

விசிக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கொலையில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad