புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் அதிகாலை ‘கேங் ஹன்ட்’ என்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறை தலைவரின் உத்தரவின்பேரில், அனைத்து சரக காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 225 போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் வீடுகளில் ஒருங்கிணைந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 210 பேர் சோதனை செய்யப்பட்டனர். ஆயுதச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டார். 10 பேர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், 116 பேர் மீது சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இதுபோன்ற சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக