ஏரல், அக்டோபர் 4 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஆறாவது கோவில் பெருங்குளம் மாயக்கூத்தர் சன்னதியில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு கருடசேவை நடந்தது.
காலை 5.30 மணிக்கு விஸ்வரூபம் 8.15 மணிக்கு நித்தியல் 11 மணிக்கு சிறப்பு கலச திருமஞ்சனம். அலங்காரம்
தீபாராதனை சாத்து முறை கோஷ்டி நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6.15 மணிக்கு உற்சவர் மாயக்கூத்தன் கருடவாகனமண்டபத்திற்கு எழுந்தருளி கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் மாடவீதி சுற்றி வந்தார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் பாலாஜி. ஸ்தலத்தார்கள் ராமானுஜம். ஸ்ரீதர். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி அறங்காவலர் குழுத் தலைவர் அஸ்வின். உறுப்பினர்கள் நாகப்பன் உலகம்மாள் சுப்பிரமணியன் . பொன் சுந்தர். கள்ளப்பிரான் கோவிலில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள கருங்குளம் வகுளகிரி மலை மீது வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி கோவில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை கருடசேவை நடந்தது.
நவதிருப்பதிகளில் எட்டாவது திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் கருடசேவை நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக