9வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி திருநெல்வேலி கமாண்டிங் அதிகாரி லெப்ட்டினன்ட் கர்னல் பங்கஜ் நாராயணன் உத்தரவின் பேரில் உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, தூய்மைபணி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.
பேரணிக்கு ஜூனியர் கமிஷன் அதிகாரி சுபேதார் ஜெகத்சிங் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜெபசிங் கால்டுவெல் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து பள்ளி வளாகம் மற்றும் முகப்பு பகுதியில் என்சிசி மாணவர்கள் தூய்மைபணி மேற்கொண்டனர். பின்னர் நடந்த ஓவியப்போட்டிக்கு ஓவிய ஆசிரியர் அலைக்சன் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஹவில்தார் பிரயாஷ் தமங், சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் தலைமையில் தலைமையாசிரியர், என்சிசி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக