காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் பலத்த காயம் போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2026

காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் பலத்த காயம் போலீசார் விசாரணை !

காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் பலத்த காயம் போலீசார் விசாரணை !
குடியாத்தம், அக்.16
வேலூர் மாவட்டம் குடியாத்தம், சீவூர் பைபாஸ் சாலையில் நேற்று மாலை காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறப்பு, ஒருவர் படுகாயம்.நேற்று மாலை குடியாத்தம் அடுத்த மொரசபல்லி பகுதியை சேர்ந்த யூசுப் என்பவரின்மகன் சித்திக் (வயது 25) உணவகத்தில் கூலி வேலை செய்துவந்தவர். மற்றும் அப்ரார் என்பவரின் மகன் ரியாஸ் (வயது 16) இருவரும் பைக்கில் குடியாத்தம் பைபாஸ் சாலையில் சீவூர் அருகே வந்து கொண்டி ருந்தனர். அப்பொழுது எதிரே வந்த காரும் பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் பைக் ஓட்டி வந்த சித்தீக் சம்பவ இடத்தி லேயே பலியானார். பின்னால் அமர்ந்து வந்த ரியாஸ் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவரப்பட்டு, கால் முறிந்த நிலையில் முதலுதவிகள் செய்த பின் மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் தப்பித்தனர்விபத்தின் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் வேகமாக போய் பாய்ந்து நின்றது இது குறித்து குடியாத்தம் நகர போலீசார வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad