திருநெல்வேலி, அக்டோபர் 16: உலகெங்கிலும் உள்ள நகைப்பிரியர்களின் பேராதரவைப் பெற்ற ‘வேர்ல்ட் ஃபேவரிட் ஜூவல்லர்’ ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம், தனது திருநெல்வேலி ஷோரூமில் பிரம்மாண்டமான ‘பிரில்லியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ’ என்னும் பிரத்யேக வைர நகை கண்காட்சியை அக்டோபர் 16, 2026 முதல் தொடங்க உள்ளது.
பிரமாண்டமான முகூர்த்த நகை செட்கள் முதல் ட்ரெண்டியான தினசரி பயன்பாட்டு நகைகள் வரை, பாரம்பரியத் தொன்மையையும் நவீன அழகையும் ஒருசேரக் கலந்தளிக்கிறது. இந்த கண்காட்சி. ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு கலைப்படைப்பாகும்! இந்த கண்காட்சி நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும்.
ஜோய்ஆலுக்காஸ் குரூப்பின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் அவர்கள் கூறுகையில்: "டயமண்ட் ஜூவல்லரி ஷோவான 'தி பிரில்லியன்ஸ்', வைரங்களின் என்றும் மாறாத வசீகரத்திற்கும், நகை வடிவமைப்பில் எங்களின் அசாத்திய அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் செலுத்தும் ஒரு பெருமையாகும். திருநெல்வேலி எப்போதும் எங்கள் இதயத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் நடைபெறும் இக்கண்காட்சி, அழகு, தனித்தன்மை மற்றும் மிகச்சிறந்த கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும் பிரத்யேக வடிவமைப்புகளைக் கண்டறியும் நல்வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்."
இந்த சிறப்பான தருணத்தைக் கொண்டாடும் வகையில், இக்கண்காட்சி நடைபெறும் நாட்களில் 1 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். இது அவர்களின் ஷாப்பிங் அனுபவத்திற்கு மேலும் ஒரு மகுடமாய் அமையும்.
தி பிரில்லியன்ஸ்' வைர நகை கண்காட்சி திருநெல்வேலி ஷோரூமில் மட்டுமே, வரும் 2026 நவம்பர் 1 வரை பிரத்யேகமாக நடைபெறவுள்ளது. ஆடம்பரம், அன்பு மற்றும் என்றும் அழியாத ஈர்ப்பின் கதையைச் சொல்லும் ஒவ்வொரு கலைப்படைப்பும் நிறைந்த இந்த நேர்த்தியான வைர உலகத்தை நேரில் கண்டுகளிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அன்புடன் அழைக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக