வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே திதி மண்டபத்தில் சுகாதாரச் சீர்கேடு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2026

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே திதி மண்டபத்தில் சுகாதாரச் சீர்கேடு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே  திதி மண்டபத்தில் சுகாதாரச் சீர்கேடு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
வேலூர் ,அக்டோபர் 11 -
வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலை யம் அருகே திதி மணி மண்டபத்தில் சுகாதார சீர்கேடு  மந்திரம் போதும் ஐயர்களால்  அடாவடி நடவடிக்கை எடுக்க பொது மக்கள் சார்பில் கோரிக்கை மந்திரம் ஓதும் ஐயர்கள் தாறுமாறாக அளவுக்கு அதிகமாக அதிக பணம் வசூ லித்து ஒவ்வொருவருக்கும் மந்திரம் தனி யாக ஓதாமல், பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் குரூப்பாக உட்கார வைத்து ஒரே மந்திரத்திற்கு இந்த ஆத்தி ரக்காரர்கள் அதிக பணம் வசூலித்து அமாவாசைக்கு முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வரும் சாமானியர்களை வஞ்சித்து வருவதாக குற்றச்சாட்டு 
வேலூர் மாவட்டம், புதிய பேருந்து நிலை யம் அருகே, முத்து மண்டபம் என்று சொல் லக்கூடிய பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திதி மண்டபத் தில் குப்பைகள் கொட்டப்பட்டு, மனிதக் கழிவுகள் அகற்றப்படாமல் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மெயின் ரோட் டில் இருந்து திதி மண்டபத்திற்குச் செல் லும் வழியில் குப்பைகள் கொட்டப்பட்டுள் ளதுடன், சுமார் 10 நாட்களுக்கு முன்பு வெட்டிப் போடப்பட்ட மரக்கிளைகளும் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் திதி கொடு க்க வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்துக்கள் வழிபாட்டிற் காகவும், முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதற்காகவும் வந்து செல்லும் புனிதமான இடத்திற்குச் செல்லும் பாதை யைக்கூட முறையாகச் சுத்தம் செய்யா மல் இருப்பது வேதனை அளிப்பதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 மேலும், திதி கொடுப்பதற்கு ஒருவரிடம் ரூ.200 வசூலிக்கப்படுவதாகவும், இந்தக் கட்டணம் எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து உரிய விளக்கம் அளிக் கப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர். வசூலிக்கப்படும் தொகை எதற்காகப் பயன்படுத்தப் படுகிறது என்பது குறித்தும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எனவே, திதி மண்டபம் மற்றும் அதற்குச் செல்லும் பாதையில் உள்ள குப்பைகள், மனிதக் கழிவுகள், வெட்டப்பட்ட மரக்கிளைகள் ஆகியவற்றை உடனடியாக அகற்றி, சுகா தாரமான சூழலை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது காலம் காலமாக நடந்து கொண்டு வருகிறது இவ் உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் கருத்து தெரிவித்தனர். 

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad