அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் தங்கும் விடுதிகளில் நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
எதிர்நோக்கும் பருவமழைக் காலத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க அரசு வளாகங்களில் சரியான சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும்.
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், விடுதி வளாகங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கொசுக்கள் உற்பத்தியாவது மற்றும் எலிகள் பெருகுவதைத் தடுக்கத் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தேங்கும் மழை நீரையும், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான டயர்கள், உடைந்த பாத்திரங்கள் போன்ற தேவையற்ற கழிவுகளை அகற்ற வேண்டும்.
ஊழியர்கள், மாணவர்கள் அல்லது விடுதி வாசிகளுக்குக் காய்ச்சல் அல்லது பிற நோய் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவச் சிகிச்சை பெற அறிவுறுத்துக.
ஒரே நேரத்தில் பலருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டால், உடனடியாகச் சுகாதார அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்
செய்திகளுக்காக
P ஜெகதீசன்
மாவட்ட ஒளிப்பதிவாளர்
தமிழக குரல்
கடலூர் மாவட்டம்
இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக