புதிய அறங்காவலர் குழுவினருக்கு
கோவில் வியாபாரிகள் சங்கத்தினர் வாழ்த்து
தலைவர் நீலவண்ணன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்தனர்
முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகும். இந்த தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர்கள் குழு சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக ஏற்கனவே பொறுப்பு வகித்து வந்த அருள்முருகன் மீண்டும் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.
அறங்காவலர்கள் வனிதா, சீ. செல்வராஜ், லோ. அரிஸ்டோ லோகநாதன், ப. பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் திருச்செந்தூர் நகர செயலாளர் முருகானந்தம் ஏற்பாட்டில் திருச்செந்தூர் கோவில் வியாபாரிகள் சங்கம் தலைவர் நீலவண்ணன் தலைமையில் நிர்வாகிகள் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் அறங்காவலர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் சங்க பொருளாளர் பொன்ராஜ், செயலாளர் சரவணன், துணைச் செயலாளர் பால்வண்ணன் மற்றும் நிர்வாகி ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக