வாலாஜாவில் பாலாறு பாதுகாப்புமற்றும் நீர் மேலாண்மைகுழுவின் ஆலோசனை கூட்டம் !
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா
அனைக்கட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாலாற்றை பாதுகாத்து அதன் நீர்வளத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து, பாலாறு பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குழுவின்
ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாலாற்றில் நீர்வரத்துக்கும் ,சுற்றுச்சூழலுக்கும்
பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றி, ஆற்றுப்பகுதியை தூய்மைப் படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது
மேலும், பாலாற்றின் கரைகளை பாதுகாக்கும் வகையில், பயன்தரும் பசுமைப்
மரக்கன்றுகள் மற்றும்பனை விதைகளை நடவுசெய்வது, ஆற்றங்கரையில் பரப்பை அதிகரிப்பது, பாலாற்றின் நீர்வளத்தை எதிர்கால தலைமுறைக்கும் பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்புடன் தொடர் ந்து பல்வேறு பணிகளை மேற்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் தீர்மானிக்க ப்பட்டது. கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பொன்.கு சரவணன் முன்னிலையில் இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் கே.எம். பாலு அவர்களிடம் வணிகர் சங்கம் சார்பில் ரூபாய் 1,00,000 நிதிவழங்கப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தில் வணிகர்கள் சங்கம், தமிழ்நாடு ஹோட்டல் சங்கம்லயன்ஸ் கிளப், ரோட்டரிகிளப், ரெட்கிராஸ் சொ சைட்டி,வியாபாரி சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களில் இருந்து தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர்கலந்து கொண்டு தங்களது
ஒத்துழைப்பை தருவதாக தெரிவித்தனர்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக