ரோட்டரி சங்கம் மற்றும் குடியாத்தம் நகராட்சி இணைந்து ஏற்பாடு செய்த மரக்கன்றுகள் நடுவு விழா !
குடியாத்தம். அக்டோபர் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
கவுண்டன்யா ஆற்றின் கரையோரம் காமராசர் பாலம் அருகில் வியாழனன்று காலை 10 மணி அளவில் மிக சிறப்பாக நடைபெற்றது சங்கத் தலைவர் டி. எஸ். ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர மன்றத் தலைவர் எஸ். சௌந்தரராஜன், ஆணையாளர் கே. எம். தனலட்சுமி, மரக்கன்றுகள் வழங்கிய கொடையாளர் டி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் குடியாத்தம். தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சிந்து, ரோட்டரி மாவட்ட ஆளுநர் டி.எஸ். ரவிக்குமார், முன்னாள் ஆளுநர் ஜே.கே.என்.பழனி, வழக்கறிஞர் பூபதி, என்.எஸ்.குமரகுரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழா வைத் தொடங்கி வைத்தனர் இவ் விழா வில் மாவட்ட ஆளுநர் டி.எஸ். ரவிக்குமார், மாவட்ட செயலர் மணிகண்டன்ஆகியோர் கொண்ட சமுத்திரம் ஊராட்சி பணியாளர் களுக்கும், ராபின்சன் குளம் ஊழியர் களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி னார்கள். மேலும் நகரின்வெளிப்புறத்தில் ரோட்டரி சங்க பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் தலைவர்கள் டாக்டர் எம்.எஸ். திருநாவுக் கரசு, டி என்.ராஜேந்திரன், என். சத்திய மூர்த்தி, செ.கு. வெங்கடேசன் அன்பு ஆர்.வி.ஹரி கிருஷ்ணன், வாசுதேவன்,சி. கண்ணன், சந்திரன், செயலாளர் ஜெ. தமிழ்ச்செல்வன், பொருளாளர் பாலாஜி, சுற்றுச்சூழல் இணை இயக்குனர்கள் ஸ்ரீகாந்த், பி. ஜெயக்குமார், உறுப்பினர் கள் டாக்டர் கென்னடி,நல்ல சிவம், மதியழகன்,ஜெயச்சந்திரன், பிரஸ் ஜெ. தமிழ்ச்செல்வன், எம். ஆர். மணி, அருண் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டார் கள்.இவ் விழாவில் புங்கன், வேம்பு, மலைவேம்பு, ஜம்பு நாகப்பழம், பெல்ட்டோ பார்ம், நீர்மருது, மகிழம்பூ, இலுப்பை போன்ற 120 மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ச்சியாக 2000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக