திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டத்திற்குட்பட்ட மேக்களுர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சமூக நல இயக்குநருமான டாக்டர் இரா. பிருந்தா தேவி, மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினர்.
கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் தாய்-சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக