குன்னூர் - பர்லியார் இடையே பேருந்து சேவை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2026

குன்னூர் - பர்லியார் இடையே பேருந்து சேவை


 கடந்த வாரம் 24 ம் தேதியன்று மிக கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவினால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் கோத்தகிரி சாலையை பயன்படுத்தி வந்தனர். தற்போது மலை பாதையில் 80% சதவீத சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பர்லியார் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் குன்னூர் வர ஏதுவாக குன்னூர் முதல் பர்லியார் வரை அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு.இ.ஆ.ப அவர்களின் அறிவுறுத்தலின் படி, குன்னூர்- பர்லியார் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று (30.10.2026) காலை 7.30 மணிக்கு பர்லியார் பகுதியிலிருந்து குன்னூர் பேருந்து நிலையம் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad