உளுந்தூர்பேட்டை அருகே அங்கன்வாடி முன்பு மாட்டுக் கொட்டகை கழிவுநீர் தேங்கி அவலம் 115 பயனாளிகளுக்கு நோய் பரவும் அபாயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 அக்டோபர், 2026

உளுந்தூர்பேட்டை அருகே அங்கன்வாடி முன்பு மாட்டுக் கொட்டகை கழிவுநீர் தேங்கி அவலம் 115 பயனாளிகளுக்கு நோய் பரவும் அபாயம்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் முன்பு மாட்டுக் கொட்டகை கழிவுநீர் தேங்கி நிற்பதால் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அங்கன்வாடி மையத்திற்கு கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என 115 பயனாளிகள் வந்து செல்கின்றனர். அங்கன்வாடி வாசலிலேயே கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கள ஆய்வு செய்து, கழிவுநீர் தேங்குவதை தடுத்து, அங்கன்வாடி மையத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad