திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தளபதி விஜய் பயிலகம் மற்றும் பத்மா கணினி பயிற்சி மையம் இணைந்து, அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் நோக்கில் இலவச கணினி பயிற்சி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
தெள்ளாரில் உள்ள புதுமா டிஜிட்டல் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எம். உதயகுமார் கலந்து கொண்டு, மாணவர்களுக்கான இலவச கணினி பயிற்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கணினித் திறன் மேம்பாட்டிற்கும் ஆதரவளிக்கும் வகையில் நன்கொடை வழங்கிய மாவட்ட இணைச் செயலாளர் ஆர். கார்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.பரமசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று, இலவச கணினிப் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஊடகப் பிரிவு துணை அமைப்பாளரும் பத்மா டிஜிட்டல் மற்றும் கணினிப் பயிற்சி மையத்தின் நிர்வாகியுமான எஸ்.மதன்ராஜ், செய்திருந்தார்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கணினி அறிவும் டிஜிட்டல் திறன்களும் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியமானதாக விளங்குகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாகக் கணினிப் பயிற்சி வழங்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் கணினி அறிவை வளர்த்து, அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்த உதவும் இந்த முயற்சி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக